
ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திர பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று கருத்து தெரிவித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்
இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாரென கூறியதை வரவேற்கிறோம். இருப்பினும் கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும், இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை.
தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளன” என்றார்.
