எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்

எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது.

இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் கப்பல்கள் வந்து சேரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எனவும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், எரிபொருள் விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விநியோக பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் நேரடி இராஜதந்திர கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் டீசலை மொத்தமாகப் பெறுவதற்குத் தேவையான ஒப்பந்தங்களை எட்டுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.

சில நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், இலங்கை அந்த நாடுகளுடன் மிகவும் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேரடி கொள்முதல் செய்யப்பட வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் கொள்முதல் செயல்முறை குறித்து தேசிய கொள்முதல் குழுவுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )