டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் திமுத் கருணாரத்ன
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையின் டெஸ்ட் துடுப்பாட்ட தூணாக இருந்த கருணாரத்னே, அண்மைக்காலமாக போட்டிகளில் சோபிக்க தவறி வருகிறார்.
இதனால் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். இலங்கையின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் தொடக்க வீரர்களில் ஒருவராக திமுத் கருணாரத்ன இருக்கிறார், பல மறக்கமுடியாத வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
100 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு விடைபெறும் இவரது முடிவு சரியானது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.