
டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அரச பேருந்துகளில் அறிமுகம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது மாகும்புர மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களுக்கு மாத்திரமே இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இயந்திரங்களை அனைத்து பேருந்துகளுக்கும் பெற்றுக்கொடுத்து நாடு முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

