திருப்பதி கோயிலுக்கு ஒரு கோடி ரூபாவை வழங்கிய பக்தர்

திருப்பதி கோயிலுக்கு ஒரு கோடி ரூபாவை வழங்கிய பக்தர்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் தங்கம், வைரம், பணம், தங்கக் காசுகள் போன்றவற்றை சுவாமிக்கு காணிக்கையாகச் செலுத்தி வரும் நிலையில், கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இன்னொரு பக்தர் ஒருவர் வைரங்கள், வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க இலட்சுமி சங்கிலியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. நினைத்த போதெல்லாம் திருப்பதிக்கு பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் என்ற மலையில் இந்த திருப்பதி திருமலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. வாகனங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக ஏராளமான மதிப்புமிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் கல்யாண் ராமன் என்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நன்கொடையின் மூலமாக ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. கல்யாண் அளித்த காசோலையானது திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This