சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாசு யோகம்…இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்

வேத ஜோதிடத்தின் அடிப்படையில் ராசிகள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன்படி சக்தி வாய்ந்த கிரகமான சனி ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் பயணிப்பார்.
இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். அதுமட்டுமின்றி மீன ராசியில் ஏற்கனவே குரு பயணித்து வருகிறார்.
இதனால் மீன ராசியில் சனி மற்றும் ராகு சேர்க்கையினால் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. மே மாதம் 18 ஆம் திகதி வரையில் இந்த யோகம் நீடித்திருக்கும். இந்த யோகத்தால் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷபத்தின் 11 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகுவதால் இந்த ராசியினருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். வயிற்று பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். குழந்தைகள் தொடர்பில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்மத்தின் 8 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகுவதால் இந்த ராசியினர் ஆரோக்கிய விடயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். நிறைய கடன்கள் வாங்க நேரிடும். நீதிமன்ற சிக்கல்கள் ஏற்படும். பணியிடங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
மீனம்
மீனத்தின் முதலாவது வீட்டில் இந்த யோகம் உருவாகவுள்ளது. இதனால் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி இருக்காது. உடல் மற்றும் மன ரீதியில் நிறைய அழுத்தங்களை சந்திப்பீர்கள். செய்யும் வேலைகளில் கவனம் தேவை.