தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தேசபந்து

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும்
சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை,
எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று (21) உத்தரவிட்டார்.