தேசபந்து தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தடுத்து வைத்துள்ள தும்பர சிறைச்சாலைக்கு சென்று, அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நேற்று (25) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.