தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட தேசபந்து தென்னகோன்

தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட தேசபந்து தென்னகோன்

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கண்டி மாவட்டம் தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (20)  உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மேலதிகமாக ஏனைய 7 சந்தேநபர்களை கைது செய்ய வேண்டாம் என தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  ஏனைய ஆறு சந்தேகநபர்களும் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர் தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This