தேசபந்து தென்னக்கோன் கைது!

தேசபந்து தென்னக்கோன் கைது!

2022 இல் காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் தென்னக்கோனை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, தென்னக்கோன் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும் நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This