பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யும் வெளிவிவகார பிரதி அமைச்சர்

பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யும் வெளிவிவகார பிரதி அமைச்சர்

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை பெல்ஜியம் செல்லவுள்ளார்.

இன்று முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் பிரதி அமைச்சர் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர ஒத்துழைப்புள்ள முக்கிய துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேற்கொள்ளவுள்ளார்.

 

Share This