நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், போயிங் 767-400 (பதிவு N836MH) மூலம் இயக்கப்படும் விமானம் DL446, விமானத்தின் இடது இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வெளிநாட்டு ஊடங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏவியேஷன் A2Z அறிக்கையின்படி , விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்தது. விமானக் குழுவினர் அவசரநிலையை அறிவித்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த விமானம் சுமார் 25 ஆண்டுகள் பழமையானது எனவும் இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் CF6 இயந்திரங்களால் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏர் லைன்ஸ் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில், ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு டெல்டா விமானம் தீப்பிடித்தது.

குறித்த விமானத்தின் இயந்திரம், அட்லாண்டாவுக்குப் புறப்படத் தயாராகும் தீப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This