பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் ஒரு வழிதடத்தில் மாத்திரம் பயணிப்பதால், பிரதான மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

 

 

CATEGORIES
Share This