கடலோர ரயில் சேவைகளில் தாமதம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாளாந்த ரயில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.