தெஹிவளை துப்பாக்கிச் சூடு – இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது

தெஹிவளை பகுதியில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.

35 வயதான சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )