உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆயுதப் படைகளை அனுப்ப 200 மில்லியன் பவுண்ட  ஒதுக்கீடு – பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவிப்பு

உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆயுதப் படைகளை அனுப்ப 200 மில்லியன் பவுண்ட ஒதுக்கீடு – பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவிப்பு

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டிய இங்கிலாந்தின் ஆயுதப் படைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் 200 மில்லியன் பவுண்ட நிதியை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி, உக்ரைன் தலைநகர் கிவ் இல் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி சந்தித்தப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா அறிவித்துள்ள இந்த நிதியானது சமாதான உடன்பாடுகள் எட்டப்பட்ட பின்னர் புதிய வாகனங்களை கொள்வனவு செய்யவும் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், வான் பாதுகாப்புகளுக்காகவும் உக்ரைனுக்கு உதவும்.

உக்ரைனின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களை வலுப்படுத்தவும் தமது படைகளை எதிர்காலத்தில் அனுப்ப பிரித்தானியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாரம் ஆரம்பத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ரஸ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் துருப்புக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பன்னாட்டுப் படைகளை உக்ரைனில் நிலைநிறுத்தவும், வழிநடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஏனெனில் பாதுகாப்பான உக்ரைன் என்பது பாதுகாப்பான இங்கிலாந்து என்றும் ஜோன் ஹீலி, கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )