குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் குறைவு

குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் குறைவு

குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அண்மைய தினங்களில் குறைவடைந்துள்ளதாக பொரள்ளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சந்துசித சேனாபதி தெரிவித்தார்.

பிரதான சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“விசேட குழந்தை நோய் நிலைமைகள் அண்மைய தினங்களில் பதிவாகாத காரணத்தினால் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கபடுவது குறைவடைந்துள்ளது.

சிறுவர் வைத்தியசாலையில் 1047 குழந்தைகளுக்கு ஒரே தடவையில் சிகிச்சையளிக்க முடியும்.

தற்போது சுமார் 700 குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவான உடல் நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க 656 படுக்கைகள் உள்ளன.

விசேட சிகிச்சை பெறும் குழந்தைகளுக்காக 391 படுக்கைகள் உள்ளன.

இதய நோய், இதய அறுவை சிகிச்சை, சுவாச நோய்கள், எலும்பியல் நோய்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நரம்பியல் நோய்கள், கண் நோய்கள், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகிய பிரிவுகளில் சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையின் படுக்கைகள் பிரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 41 படுக்கைகள் காணப்படும் நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 30 புதிய படுக்கைகள் சேர்க்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Share This