பேருந்துகள், முச்சக்கரவண்டிளை அலங்கரிப்பது ஒரு கலை – நாமல் ராஜபக்ச

பேருந்துகள், முச்சக்கரவண்டிளை அலங்கரிப்பது ஒரு கலை –  நாமல் ராஜபக்ச

பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This