அரச சேவையில் 62ஆயிரம் பேரை இணைக்க தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு

அரச சேவையில் 62ஆயிரம் பேரை இணைக்க தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு

அரச சேவையில் மேலும் 62ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் மாநாடு இன்று கொடும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குப்பற்றல் மிகவும் முக்கியமானதாகும். அவர்களால்தான் சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்ப முடியும். அரசியல் அதிகார வர்க்கத்தினரின் கைகளில் இருந்த இளைஞர் மன்றங்கள் இன்று மீண்டும் நாட்டை நேசிக்கும் நாட்டை அபிவிருத்தி செய்ய துடிக்கும் இளைஞர்களின் கைளுக்கு கிடைத்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை இளைஞர்கள் கைப்பற்ற வேண்டும். இந்த கதிரையில் நாம் நிரந்தரமாக அமர்ந்திருக்க போவதில்லை. கதிரையில் அமர்ந்த போதே அதிலிருந்து செல்லும் நாள் குறித்தும் எண்ணியுள்ளோம். ஆனால், இந்த அதிகாரம் மீண்டும் யாரிடம் செல்ல வேண்டும் என்பதையும் எண்ணியுள்ளோம். எதிர்கால இளைய தலைமுறையினர் வசமே அதிகாரம் செல்ல வேண்டும். அதற்கான பணியையே நாம் ஆற்றி வருகிறோம்.

அரச துறையில் பல்வேறு வெற்றிடங்கள் உள்ளன. அரச சேவையில் அதிகளவானவர்கள் உள்ள போதிலும், துறைசார் நிபுணத்துவம் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர். அவ்வாறான வெற்றிடங்களை நிரப்ப உள்ளோம். குறிப்பாக 62 ஆயிரம் பேருக்கு அரச சேவையில் வெற்றிடம் உள்ளது. குறித்த வெற்றிடத்தை நிரப்ப தீர்மானித்துள்ளோம். விரைவாக குறித்த வெற்றிடங்களை நிரப்புமாறும் அரச நிறுவனங்களுக்கு பணித்துள்ளோம்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2023ஆம் ஆண்டாகும்  போது 15 பில்லியனர் அமெரிக்க டொலராக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதனை இளைஞர்களால்தான் செய்ய முடியும். அதற்கான வாய்ப்புகளைளே தற்போது உருவாக்கி வருகிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Share This