
பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கு – 11 பேர் உயிரிழப்பு
மத்திய பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் செபு (Cebu) நகரில் உள்ள பினாலிவ் குப்பைக் கிடங்கில் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தபோது மண்சரிவு
ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியாளர்கள் இதுவரை 12 காயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்,
ஆனாலும் 20 இற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சரிவுக்கான காரணம் குறித்து விசாரணைகள் முற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
