அர்ச்சுனா எம்பிக்கு கொலை மிரட்டல்

அர்ச்சுனா எம்பிக்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே குறித்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, (நேற்று முன்தினம் 24) 119 அழைப்பின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு தொலைபேசி எண்களில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக தெல்லிப்பழை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )