
பூநகரி உள்ளிட்ட சில பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம்
பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
