அரிசியை இறக்குமதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

அரிசியை இறக்குமதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

அரிசியை இறக்குமதி செய்ய வழங்கிய கால அவகாசம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்து 70ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்ததுடன், அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

இதன் பிரகாரம் இதுவரை 22ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் 5500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் அரிசி சில கட்டங்களாக நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமையுடன் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, கால அவகாசம் நிறைவடைவது குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தும் என்றார்.

Share This