
‘டித்வா’ புயல் : விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை கோரும் எதிர்க்கட்சி
‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், விசேட தெரிவுக்குழுவின் அமைப்பை மாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான எழுத்துமூல கோரிக்கையொன்று கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
TAGS 'டித்வா' புயல்
