
டித்வா சூறாவளியால் 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடரால் நாடு முழுவதும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் (DMC) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 13,781 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மேலும் 101,055 வீடுகள் பாதகமான வானிலை காரணமாக பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவாக வீடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புத்தளம் மாவட்டத்தில் பகுதியளவு சேதமடைந்த வீடுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 66,132 பேர் 723 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
