அரச அச்சக திணைக்களத்தின் வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

அரச அச்சக திணைக்களத்தின் வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அரச அச்சக திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதன் தரவு மாற்றப்பட்டுள்ளது.

அச்சிடும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று (30) இரவு 7.30 மணியளவில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தமது முகநூல் பக்கத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

 

Share This