இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும்

இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அந்த அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது, கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவழிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 440 மெட்றிக் டொன் அரிசியை தனியார் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதன்படி, இம்மாதம் 20ம் திகதி வரையில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This