இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்

மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மம்தா கூறுகையில், “வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கிண்ணத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 இலட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவைத்துள்ளது.
