சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை – சிராஜ்

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.
இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும், ஆனால் தனது குறைகளை சரிசெய்துகொள்ள இந்த இடைவெளி பெரிதும் உதவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியின் பின்னர் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 153 ஓட்டங்கள் என்ற இலக்கை டைட்டன்ஸ் அணி 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் அடைந்திருந்தது. இந்த் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் து சிராஜ், சன்ரைசர்ஸ் துடுப்பாட்ட வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.
நான்கு ஓவர்களில் வெறும் 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சிராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெறாமல் போன பிறகு, சிராஜ் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்றையப் போட்டிக்கு பின்னர் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து சிராஜ் பேசியிருந்தார்.
தான் அணியில் இணைத்துக்கொள்ள முடியாததைஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். தனது பந்துவீச்சு, உடற்தகுதி மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதன் மூலம் மீண்டும் அணிக்கு திரும்ப முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சொந்த மண்ணில் விக்கெட்டுகள் வீழ்த்தியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என் குடும்பத்தினர் ஆட்டத்தைப் பார்க்க இங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் நன்றாக பந்து வீசியது எனக்கு நம்பிக்கையைத் தந்தது.
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாட நிலையில் ஓய்வு நேரத்தில், எனது பந்துவீச்சு, உடற்தகுதி மற்றும் மன வலிமை ஆகியவற்றை நான் மேம்படுத்திக்கொண்டேன்.
சில நாட்களுக்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என் குறைபாடுகளை சரிசெய்து உதவ என்னைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன். “நான் தொடர்ந்து விளையாடுவதால் என் தவறுகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஆனால் ஒரு இடைவெளி எனக்கு உதவியாக இருந்தது,” என்று சிராஜ் மேலும் தெரிவித்திருந்தார்.