அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை

பொதுவாக சமையல் செய்யும்போது அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் சுவையுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொத்தமல்லியில் விட்டமின் சி, கே,ஏ, பொட்டாசியம் ஆகியவை அதிகம்.
பச்சை கொத்தமல்லியானது உணவில் நறுமணத்தை அதிகரிப்பதோடு பித்தத்தை தணிக்கவும் நஞ்சை முறிக்கவும் உதவும்.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கட்டுக்குள் இருக்கும். இதனால் வேகமாக உடல் எடை குறையும்.
மேலும் கொத்தமல்லி இலைகள் ஒரு படி மேலே சென்று புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்தமல்லி இலைகளை சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
கொத்தமல்லி இலைகளில் காணப்படும் சாறு உடலிலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்.
சளி பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறவும் இந்த கொத்தமல்லி இலைகள் உதவும்.
கொத்தமல்லி இழல சாறு கலந்து குடித்து வந்தால் வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் பிரச்சினை குணமாகும்.