தொடரும் வெப்பநிலையான வானிலை

தொடரும் வெப்பநிலையான வானிலை

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் இருப்பதாக திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணிய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This