கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் நாளை விடுவிக்கப்படும்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் நாளை விடுவிக்கப்படும்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் நாளை (27) காலைக்குள் விடுவிக்கப்படும் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் சுங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், இந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.

எனினும், கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு ஏனைய தரப்பினரின் உதவியும் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This