எல்ல வளைவில் மண் அணை நிர்மாணம்

எல்ல வளைவில் மண் அணை நிர்மாணம்

பதுளை – எல்ல வீதியின் ஆபத்தான வளைவில் மண் அணையொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

எல்ல வீதியில் ஐந்தாம் மைல் போஸ்ட் பகுதியில் கடந்த 04ம் திகதி இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னரும் குறித்த ஆபத்தான வளைவில் பல்வேறு விபத்துக்கள், அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. அதனைக் கருத்திற் கொண்டு குறித்த ஆபத்தான வளைவில் இனிவரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தற்போது மண் நிரப்பி அணையொன்று நிர்மாணிக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் குறித்த ஆபத்தான வளைவில் ஏற்படும் விபத்துக்களின் போது வாகனங்கள் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாவதை தடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )