ஜொ்மனி தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி வெற்றி

ஜொ்மனியில் நடைபெற்ற தோ்தலில் ஃப்ரெட்ரிச் மொ்ஸ் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணியுடன் அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி, தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.
இந்த நிலையில், கன்சா்வேட்டிவ் கூட்டணி 208 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றுள்ளது.
அலைஸ் வீடல் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.அதையடுத்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஃப்ரெட்ரிச் மொ்ஸ் அடுத்த பிரதரமாகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட அவா் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான ஜொ்மனிக்கு தலைமை ஏற்பது போரில் உக்ரைனுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.