சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

என்றாலும், குறித்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மறுத்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share This