
சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இலங்கைக்கு 1 மில்லியன் RMB பெறுமதியான நிவாரண உதவி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை, இலங்கைக்கு 1 மில்லியன் ரென்பி (RMB) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சீனத் தூதரகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில், இது இலங்கை மக்களுக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அன்பும் அக்கறையும் என குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20 ஆவது மத்திய குழு உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான உயர் மட்ட குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
