
கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பம்.
பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ் தேவி புகையிரதம் நாளை காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.
அதேபோல் நாளை (24) காலை 10.30 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.54 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது.
காங்கேசன்துறை – அநுராதபுரம் வரையிலான யாழ்ராணி புகையிரத சேவை நேற்று திங்கட்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடருக்கு பின்னர் குறுகிய காலப்பகுதியில் வடக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு கோட்டை- மட்டக்களப்புக்கான புகையிரத சேவை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
