இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி இலங்கைக்கு விஜயம் 

இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி இலங்கைக்கு விஜயம் 

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ கொழும்பிற்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

19ஆம் திகதி கொழும்பு வந்த அவர் நாளை 21 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, நீண்டகாலமாக நீடிக்கும் அமெரிக்க-இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வையினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனும், இராணுவத் தலைவர்களுடனும் அட்மிரல் பப்பாரோ பல சந்திப்புகளை மேற்கொள்வார்.

கட்டளைத்தளபதி பப்பாரோவின் விஜயமானது, இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்குமான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

Share This