கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு சுமார் 16 கோடி ரூபாய் நட்டம்
கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை மீறிய 35 பேராசிரியர்களிடமிருந்து 159,907,138 ரூபாய் மீள பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கலாநிதி பட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த பட்டத்துக்காக செலவாகும் பணத்தை மீள செலுத்தாமல் பல்கலைக்கழக சேவையை மோசடியான ரீதியில் விட்டுச் செல்வதால் இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு கடனை மிச்சம் வைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.