புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து 20,218.36 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி 20,000 புள்ளிகளை எட்டியிருந்த போதிலும், அன்றைய தினம் முடிவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.54 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.