கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது

கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது

இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 11.00 மணியளவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லைத் கடந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 203.71 புள்ளிகள் அதிகரித்து 21,003.97 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

Share This