நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானம்

நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானம்

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானத்தின் பணிகள் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு SSC மைதானத்தில் புதிய அதிநவீன LED மின்விளக்குகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக வீரர்கள் ஓய்வறையை மேம்படுத்தல், போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்களுக்காக புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல பணிகளும் இங்கு முன்னெடுக்கப்படுவதாக சுஜீவ கொடலியத்த கூறியுள்ளார்.

மைதானத்தை நவீனமயப்படுத்த மொத்தமாக 1.7 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )