கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது

கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது

கொழும்பு – கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

பேரிடர் காரணமாக சேதமடைந்த 256 பிரதான வீதிகளில் 219 வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் குருநாகலில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் ரயில் டிக்கெட்டுடன் பயணிக்க முடியும் என்று அதன் பணிப்பாளர் நாயகம்  நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கண்டி ரயில் நிலையம் மற்றும் குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டைக்கு தொடர்புடைய பேருந்து சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4.15 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் குருநாகலுக்கு மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ரயில் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியது.

இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பேருந்துகளைத் தவிர, மாதாந்திர ரயில் பருவ டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பிற வழக்கமான பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )