கேகாலையில் மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி

கேகாலையில் மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி

கொழும்பு – கண்டி வீதி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தை மூடுவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

அந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்த
நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )