‘க்ளீன் ஸ்ரீலங்கா’ பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம் 

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம் 

பொதுமக்களுக்கும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான உதிரி பாகங்களை பொருத்திய 12 பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு அட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குறித்த பஸ் உரிமைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து ஹட்டனில் இருந்து புறப்பட்டு ஹட்டனை வந்தடைந்த குறுகிய தூர மற்றும் நீண்ட தூர சேவை பஸ்கள் (02) அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது 12 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் அகற்றப்பட்டு ஏழு நாட்களுக்குள் அட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளிடம் காண்பிக்கும் வரையில் பேருந்தின் வருமான அனுமதிப்பத்திரம் போக்குவரத்து பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துகளில் பயணிகள் பேருந்துகளில் பலத்த காயங்களுக்கு உள்ளாக இவ்வாறு பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான உதிரி பாகங்கள் காரணமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This