நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் ரயில் நிலையங்களில் தேநீர் மற்றும் பிற இனிப்பு பானங்களை வாங்குவதற்கான விற்பனை இயந்திரங்களை நிறுவுவது குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் ஓய்வறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மேலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறைமை மூலம் பயணிகளுக்கு ரயில்கள் பற்றிய தகவல்களை வழங்குவதிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Share This