கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே சம்பவதினமான நேற்று ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதனையடுத்து காயமடைந்த மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Share This