யோஷித ராஜபக்ஷவிடம் சிஐடி தீவிர விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரிடம் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
யோஷித ராஜபக்ஷ இன்று அதிகாலை பெலியத்த பகுதியில் சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிஜடியினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பில் இடம்பெற்ற மோசடியில் யோஷித ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அறிவித்ததை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.