
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம்
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம்
பல வருட சர்ச்சைகளுக்கு பிறகு, லண்டனில் புதிய சீன தூதரகத்திற்கான திட்டத்தை அரசாங்கம்
அங்கீகரித்துள்ளது.
“நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் இதுவே இறுதி முடிவு என வீட்டு செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புலனாய்வு அமைப்புகள் (intelligence agencies) திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த முடிவை கண்டித்து வருகின்றனர்.
இதனை அவமானகரமான செயல் என நிழல் சமூக செயலாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
லிபரல் டெமாக்ராட்டுகள் கெய்ர் ஸ்டார்மரின் “மிகப்பெரிய தவறு” என விமர்சிக்கின்றனர்.
சீனா இந்த புதிய தூதரகத்திற்கான இடத்தை 2018 இல் £255 மில்லியனுக்கு வாங்கியது.
