குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் சீன அரசாங்கம்

குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் சீன அரசாங்கம்

சீனாவில் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக, 3 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் (சுமார் $500) வழங்க சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சீன அரசாங்கம் இந்த மானியத்தை தனிநபர் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொள்கையால் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், கடந்த ஆண்டு இறுதிக்குள், சீனாவின் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை 310 மில்லியனை எட்டியதாகவும் சீன ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பல உள்ளூர் அரசாங்கங்கள் கடந்த சில ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளன.

இந்த மானியத்தின் கீழ், சீனாவின் ஹோஹோட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முதல் குழந்தைக்கு 10,000 யுவான் மானியத்தையும், இரண்டாவது குழந்தைக்கு 5 வயது வரை ஆண்டுக்கு 10,000 யுவான் மானியத்தையும் பெறும்.

சீன அரசாங்கம் 10 வயது வரை எந்தவொரு குழந்தையும் ஆண்டுதோறும் பணத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் கூறியுள்ளது.

Share This